Monday, January 5, 2015

...

Thursday, May 10, 2012

Tuesday, October 4, 2011

கூகுளின் மொழிபெயர்ப்பு சேவை இப்போது தமிழ் மற்றும் மேலும் 4 மொழிகளில்

தேடுபொறி  என்றால் அது நம்  நினைவிற்கு வருவது கூகுள்.  கூகுள் நம் அன்றாட வாழ்வில் நம்முடன்  இணைந்து
விட்டது என்றால் அது மிகையாகாது. அதில் இந்தியா வின் பங்கு மிக முக்கியமான ஒன்றாகிவிட்டது.

அதற்கு கூகுள் செய்யும் கைம்மாறு தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு சேவையை இப்போது  தொடங்கி உள்ளது.மேலும்  பெங்காலி, குஜராத்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் கூகுளின் மொழிபெயர்ப்பு சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்துவது எப்படி?


2009  ஆம் ஆண்டு மொத்தம் 11 மொழிகளில் கொண்டு தொடங்கப்பட்ட கூகுள் மொழிபெயர்ப்பு சேவை தற்போது 63 மொழிகளாக உயர்ந்துள்ளது என கூகுள் அறிவியல் ஆராய்ச்சியாளர் ஆஷிஷ் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் லட்சக்கணக்கான இணையதள தமிழ்   வாசகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என கூகுள்  நிறுவனம் கூறுகிறது

Facebookல் உங்களை unfriend செய்தவர்களை சுலபமாக கண்டறிய புதிய வசதி – Time Line Users

Facebook  தளம் Time line எனப்படும் புதிய தோற்றத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.  இந்த புதிய தோற்றத்தின் நோக்கம் Face book ன் எல்லா தகவல்களும் ஒரே பக்கத்தில் வரும், எதற்காகவும் உள்ளே செல்ல வேண்டிய அவசியமில்லை.
இந்த புதிய தோற்றத்தில் உள்ள புதிய வசதிகளில் ஒன்று தான் உங்களை நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கியவர்களை பார்க்கும் வசதி. அதன் மூலம் உங்களை நீக்கியவர்களை எப்படி காண்பது என இனி பார்ப்போம்.
முதலில் உங்கள் Facebookன்  profile  பகுதிக்கு செல்லுங்கள்.  அதில் கீழ் படத்தில் காட்டப்பட்டுள்ள இடத்திற்கு செல்ல வேண்டும்.
-  அதில் Made Friends  என்று இருக்கும் link  ஐ click  செய்யுங்கள்.
-  உங்களுக்கு மற்றும் ஒரு pop up window திறக்கும்.
- இந்த மாதத்தில் உங்களுக்கு நண்பர்களாக சேர்ந்தவர்கள் பட்டியல் இருக்கும். அதில் ஒவ்வொரு நபர்க்கும் நேராக friends  என்ற ஒரு பட்டன் இருக்கும்.
- ஆனால் உங்களை யாராவது பட்டியலில் இருந்து நீக்கி இருந்தால் அவர் பெயருக்கு நேராக  Add Friend  என்ற பட்டன் இருப்பதை பார்க்கலாம்.
- இந்த பட்டன் இருந்தால் அவர் உங்களை நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளார் என அறிந்து கொள்ளலாம்.

Popular Posts